Thursday, December 6, 2018

உங்களின் நிலத்தை அளக்க வேண்டும் என்றால்?

Image may contain: text
உங்களின் நிலத்தை அளக்க வேண்டும் என்றால்?
அளவீடு செய்ய நினைக்கும் நிலம் மாநகராட்சிக்கு உட்பட்டதாக இருந்தால் மாநகராட்சி ஆணையரை அணுக வேண்டும். மாநகருக்கு என்று தனி சர்வேயர்கள் உண்டு. இதற்கு செட்டில்மென்ட் சர்வே என்று பெயர்.
நகராட்சிக்கு உட்பட்ட நிலம் என்றாலும் மேலே சொன்னது போலத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
பேரூராட்சி என்றால் அதற்கு E. O எனப்படும் செயல் அலுவலரை அணுக வேண்டும். இங்கேயும் நில அளவையர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஸ்டீரிட் சர்வேஎன்று வழக்கத்தில் சொல்வார்கள்.
கிராமப் பகுதிகளில் என்றால் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் அரசு கருவூலத்தில் பணம் செலுத்தினால் நிலத்தை அளந்து தருவார்கள். தற்போது அனைத்தும் வங்கி மயமாகிவிட்டது. வங்கியில் தான் பணம் கட்ட வேண்டும்.
ஒரு சர்வே எண்ணில் எத்தனை உட்பிரிவுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு ஏற்றார் போலத்தான் பணம் கட்ட வேண்டும். ஒரு உட்பிரிவுக்கு ரூ. 40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் சர்வே எண் 16 என்று வைத்துக் கொள்ளுங்கள். 16ல் உட்பிரிவுகளாக 2, 3, 2A, 3A, 4A, 5A என இருக்கிறது. இந்த நிலங்கள் எல்லாம் ஒருவருக்கே சொந்தமானது என்றால், ஆறு உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ரூ. 240/- கட்ட வேண்டும். இதை வங்கி செல்லான் மூலம் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த செல்லானை கட்டாயமாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், வங்கி செல்லான், கிரையப் பத்திரம், மூலப் பத்திரம், பட்டா ஆகியவற்றை இணைக்க வேண்டும். தாசில்தாருக்கு அல்லது ஆணையருக்கு அல்லது செயல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் மனுவை பரிசீலித்து சர்வேயருக்கு அனுப்பி வைப்பார்.
15 நாட்களுக்குள் நிலத்தை சர்வேயர் அளந்து தர வேண்டும். அளவீடு சரியாக இருக்கிறதா? வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை சொல்ல வேண்டும். அதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தை பிரித்து அளந்து, அதற்கான அத்தாட்சியை சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும்.
நிலத்தை அளப்பதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபருக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும்

18 comments:

  1. வணக்கம் சார், பிரச்சினை இருக்கும் நிலத்தை தாலுகா சர்வேயர் அளந்தும் பிரச்சினை தீரவில்லை மேற்கொண்டு மாவட்ட ஜில்ல சர்வேயர் கொண்டு அளவிடலாம

    ReplyDelete
    Replies
    1. நிலம் அளித்ததில் பிரச்சினை இருக்கிறது என்றால் என்ன செய்வது.

      Delete
  2. நிலத்தை மணியகாரர் வந்து அளப்பது சரியா தவறா

    ReplyDelete
  3. சர்வேயர் அளந்த பின்பு சர்வேயர் அளந்ததற்கான ஆவணங்கள் ஏதும் வழங்குவாரா.அளந்த பின்பு அவ்விடத்திற் க்கு பட்டா வழங்கப்படுமா.

    ReplyDelete
  4. சர்வேயர் அளந்த பின்பு சர்வேயர் அளந்ததற்கான ஆவணங்கள் ஏதும் வழங்குவாரா.அளந்த பின்பு அவ்விடத்திற் க்கு பட்டா வழங்கப்படுமா.

    ReplyDelete
  5. பணம் கட்டியும் அளக்க வரவில்லை என்றால் என்ன செய்வது.

    ReplyDelete
  6. நான் நிலம் அளக்க செல்லான் கட்டி ஒரு மாதம் முடிய போகிறது. அனால் இதுவரை அளக்க வரவில்லை. வர வைக்க என்ன செய்ய வேண்டும்.
    இன்னொரு கேள்வி 15 நாட்களில் அளந்து கொடுத்தாக வேண்டும் சொல்றாங்க உண்மையா? உண்மை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. alakka Varuvatharku 30days Aagum

      Delete
    2. 30 days ah illa 90 days ah sir

      Delete
  7. பட்டா இல்லாத கிராம நத்தம் நிலத்தை, மூலப் பத்திரம் கொண்டு அளந்து தரக் கோரி விண்ணப்பிக்க முடியுமா?

    ReplyDelete
  8. சர்வேயர் நிலத்தை எந்த இடத்தில் இருந்து அளக்க வேண்டும் . அளந்த நிலம் தவறாக அளிக்கப்பட்டதாக இருந்தால் அதே சர்வேயர் மீண்டும் அளந்து தருவரா

    ReplyDelete
  9. நான்கு வருடமாக முன்று முறை கட்டணம் செலுத்தப்பட்டும் இது வரை வந்து அளக்கவில்லை அடுத்து என்ன செய்ய வேண்டும.

    ReplyDelete
  10. RTI mulam kelunga

    ReplyDelete
  11. எங்கள் நிலம் முதலில் அளந்து இடத்தை காட்டி கல்லை நட்டிட்டு போனார் இந்த நிலத்திற்கு பட்டா கேட்டால் தற்போது புலண் மாறி கட்டப்பட்டுள்ளது எனவே பத்திரத்தில் புல் எண் மாற்றினால் தான் பட்டா வழங்கப்படும் என்றார் இனி நான் என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  12. சமூக ஆர்வலர் சையத் 9600309255

    ReplyDelete